Pages

Wednesday, 30 September 2009

தம்தம்தம் தம்தம் தததம்


ராஜாவின் பாடல்களில் பிடித்தது எதுவென்று கேட்ட போது ஆளுக்கொரு படம் சொன்னது நினைவிருக்கிறதா? கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே அதைத் தேடி தேடிப் பார்த்தேன் என்ற கவிப்பேரரசு, அடுத்த வரியாக ராஜாவின் பாடலில் சிறந்ததை பாடிப் பார்த்தேன் என்று சேர்த்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்க கூடும்தானே!!

நம் மனநிலைக்கு ஏற்ப அவ்வபோது ராஜாவின் ஏதோ ஒரு பாட்டு நம்மை ஆட்கொண்டு விடும். அந்த வகையில் சில வாரங்களாக என்னை இயக்கிக் கொண்டிருக்கும் பாட்டு

“சங்கத்தில் பாடாத கவிதை உன்
அங்கத்தில் யார் தந்தது
சந்தத்தில் மாறாத நடையொடு என்
முன்னே யார் வந்தது”

ஆட்டோ ராஜா என்ற கேப்டனின் படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலின் பின்னால் ஏகப்பட்ட குழப்பங்கள் உண்டு. இந்தப் பாட்டு முதலில் மலையாளத்தில் வந்தது என்றும், இந்த மெட்டுக்கு சொந்தக்காரர் சங்கர்- கணேஷ் என்றும் பல கட்டுக்கதைகள் இணையத்தில் உலவுகிறது. எனக்கு தெரிந்த சில விஷயங்கள்

இந்த மெட்டு முதலில் மூன்றாம் பிறை பிண்ணனி இசையில் ராஜா உபயோகித்தது. இதை மிகவும் ரசித்த பாலு மகேந்திரா ஓலங்கள் என்ற மலையாள படத்தில் ராஜாவை பாடலாக்க சொன்னார். தும்பி வா என எஸ்.ஜானகி தனியாக பாடிய பாடலது. அதேப் பாடலை பின் தமிழில் டூயட்டாக மாற்றினார் ராஜா. தும்பி வா பாடலின் ஸ்ருதியும் இதுவும் வேறு வேறு. இதை ராஜா தொடங்கும் போதே ஒரு காதல் ஏக்கத்தை காண்பித்திருப்பார். ஆனால் மலையாளத்தில் அப்படி இருக்காது.

அதேப் போல இந்தப் பாடலை எழுதியது புலமைப்பித்தன் என்றும், கங்கை அமரன் என்றும் சொல்கிறார்கள். எனக்கும் சரியான தகவல் கிடைக்கவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்களேன். பாடலின் வரிகளை கவனித்தால் இதன் முக்கியத்துவம் விளங்கும். எனக்கு மிகவும் பிடித்த வரி. (பின்னூட்டத்தில் இதை எழுதியவர் வைரமுத்து என்கிறார் அப்துல்லா.)

”அந்திப்போர் காணாத இளமை
ஆடட்டும் என் கைகளில்
சிந்தித்தேன் செந்தூர இதழ்களில்
சிந்தித் தேன் பாய்கின்ற உறவை”

ஒவ்வொரு வரியும் இலக்கிய ரசம் சொட்டும். புலமைப்பித்தனாகத்தான் இருக்க முடியும் என்று நான் நினைத்தாலும், கங்கை அமரனும் இதை எழுதும் திறன் கொண்டவர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

இந்தப் பாட்டு பின் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளுக்கும் சென்று வென்றது. ஹிந்தியில் மட்டும் ராஜா இசை இல்லையென நினைக்கிறேன். சமீபத்தில் கூட சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் ஸ்ரேயா தோன்ற இதன் இசை ரீமிக்ஸ் செய்யப்பட்டு அமர்க்களமாக வந்தது. நான் கூட ஒரு பதிவில் இது என்னப் பாட்டு என்று கேட்டிருந்தேன். யாரும் சொல்லவில்லை. யூட்யூபில் தேடினேன். கிடைக்கவில்லை. ஒரு நாள் ஹலோ எஃப்.எம்முக்கு அழைத்து, ”ஹலோ... எஃப்ம்மா” என்று இந்தப் பாடலைக் கேட்டால் இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.அது எஃப்.எம் தானாம். அந்தப் பாடலை இல்லையென்று சொல்லிவிட்டார்கள். எப்படியாவது இந்தப் பாடலையும் எஃப்.எம்மில் ஹிட்டாக்க வெண்டும் என்பதே என் அடுத்த ஆசை.

மலையாள பாடல்:

ராஜா ஒரு live concertல் இந்தப் பாடலை பாடியதைக் கேட்டால் ஏதோ ஒரு நிறைவான தருனத்தை கடந்தது போல் இருக்கும். அதுவும் அந்த வயலின்... வாவ்!!!.. இந்த வீடியோவில் 47வது செகண்டில் ஆரம்பிக்கும் வயலின் பிட்டை கேளுங்கள். அரங்கம் ஆர்ப்பரிக்க தொடங்கும். இதை ரிங்டோனாக மாற்றி வைத்துக் கொண்டால் உங்கள் ஆயுள் சில நாட்கள் நீடிக்கக்கூடும்.

இதோ அந்த காலத்தால் அழியாப் பாடல். கேப்டனை கான சகிக்காதவர்கள் இங்கே தரவிறக்கி கேளுங்கள்.

பாடல் வரிகள்:

சங்கத்தில் பாடாத கவிதை உன்
அங்கத்தில் யார் தந்தது
சந்தத்தில் மாறாத நடையொடு என்
முன்னே யார் வந்தது
தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை உன்
அங்கத்தில் யார் தந்தது


கையென்றே செங்காந்த மலரே
நீ சொன்னால் நான் நம்பவோ
கால் என்றே செவ்வாழை இலைகளை
நீ சொன்னால் நான் நம்பி விடவோ
மை கொஞ்சம்.......
பொய் கொஞ்சம்........
கண்ணுக்குள் நீ கொண்டு வருவாய்
காலத்தால் மூவாத உயர் தமிழ்
சங்கத்திலே....


அந்திப்போர் காணாத இளமை
ஆடட்டும் என் கைகளில்
சிந்தித்தேன் செந்தூர இதழ்களில்
சிந்தித் தேன் பாய்கின்ற உறவை
கொஞ்சம் தா..அ...
கொஞ்சம் தா..ஆ..
கண்ணுக்குள் என்னென்ன நளினம்
காலத்தால் மூவாத உயர் தமிழ்
சங்கத்திலே


ஆடை ஏன் உன் மேனி அழகை
ஆதிக்கம் செய்கின்றது
நாளைக்கே ஆனந்த விடுதலை
காணட்டும் காணாத உறவில்
கை தொட்டு...ஆ
மெய் தொட்டு..ஆ
சாமத்திலே தூங்காத விழிகளில்
சந்தித்தேன் என்னென்ன மயக்கம்


தமிழ் சங்கத்திலே பாடாத கவிதை உன்
அங்கத்தில் யார் தந்தது

No comments:

Post a Comment