சிநேகாவின் வெத்து மிரட்டலுக்கு ரூ.60 ஆயிரம் செலவு!
பூ ஒன்று புயலானது பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?அதுபோல பூவே வடிவான சிநேகா புயலாக மாறியிருக்கிறார்.சிநேகா போன்ற பதுமைகள் மென்மையான, குடும்பப்பாங்கான வேடங்களுக்கு மட்டுமே பொருத்தமானவர்கள். ஆனால், பார்க்க பூ போன்ற இவர்களின் மனதிற்குள் புயல் போன்ற வேடத்தில் நடிக்கவேண்டும் என்ற அவா இருந்துகொண்டே இருக்கும். மென்மையான வேடங்களை மட்டுமே ஏற்று வரும் பல நடிகைகள் தங்கள் பேட்டியின் போது தங்கள் மனப்போக்கை ‘விஜயசாந்தி போல ஒரு வேடத்தில் நடிக்க வேண்டும்’ என்று நிச்சயம் பகிர்ந்து கொள்வார்கள்.
சிநேகாவின் ஆசையும் இப்போது ஈடேறிவிட்டது. பவானி ஐ.பி.எஸ்., திரைப்படத்தில்தான் இப்படி துப்பாக்கி பிடித்திருக்கிறார் அவர். அவருடைய ஜீன்ஸ் பேண்ட் என்ன, வளைவுகளில் வளையும் டீசர்ட் என்ன, நிற்கும் ஸ்டைல் என்ன, துப்பாக்கியைப் பிடித்திருக்கும் தோரணைதான் என்ன? என்ன,என்ன,என்ன விலை அழகேன்னு பாடணும் போலிருக்கு. அதுதாங்க மேட்டரே!
சிநேகா போட்டிருக்கும் வி நெக் டீசர்ட் XS, S, M, L, XL என நான்கு அளவுகளில் கிடைக்கிறது. உடலோடு ஒட்டி, உராய்ந்து பார்ப்பவர்களை சூடேற்றக்கூடியது. ஆனால் மென்மையான பருத்தி இழைகளால் செய்யப்பட்டது. சுருங்காது, சுணங்காது. தேவையான இடங்களில் மிடுக்கையும் காட்டாமல் இருக்காது. இதை வாஷிங்மெஷினில்தான் தோய்த்தெடுகக வேண்டும். கையில் கசக்கினால் கந்தலானாலும் ஆகிவிடும். இதன் விலை ரூ.2,200.
சிநேகாவின் இடுப்பை கச்சிதமாகக் கவ்வியிருக்கும் ஜீன்சின் பெயர் ஹனி கர்வி பிட் ஸ்ட்ரச் ஜீன்ஸ்(என்னப் பெயர் பொருத்தம் பாருங்கள்). மயில்கள் விரும்பும் வண்ணத்தில் கிடைக்கிறது.இடுப்பு முதல் பாதம்வரை இறுக்கப் பிடிக்கும் இதன் அடிப்பாகம் பூட் கட் செய்யப்பட்டிருக்கும். ஜீன்ஸில் பூட் கட் ஜீன்ஸ் லேட்டஸ்ட். இதன் விலை ரூ.8,700.
பொதுவாக பெண்கள் இடுப்பு வழவழப்பானது மிருதுவானது என்றாலும் பேண்ட் அதற்குரிய இடத்தில் பொருந்த வேண்டுமானால் பெல்ட் வேணும் இல்லையா. சிநேகாவும் அதுக்குத்தான் பெல்ட் போட்டு ஜீன்ஸை (அப்புறம் அதுபாட்டுக்கு சர்ர்ர்ன்னு கீழே இறங்கிட்டா என்னா பண்றது?) பிடிச்சு நிக்க வச்சுருக்கார்.
சிநேகாவின் பெல்ட் பிரெளன், பிளாக், லைட் பிரெளன் என மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. இது சுத்தமான லெதர் பெல்ட் (எம்பாஸ்டு லெதர்). இந்த பெல்ட்டில் என்ன வசதின்னா… அதனுடைய பக்கிள்ளை கழட்டி வேறு ஒரு பக்கிளை மாட்டிக்கொள்ளலாம் என்பதே.அவசரத்துக்கு உருவி, எதிரியை ஒண்ணு விட்டோம்னா வாழ்நாள் முழுக்க மறக்கவே மாட்டார். அழகான, மிருதுவான, மிடுக்கான இந்த பெல்ட் ஒரு இத்தாலியத் தயாரிப்பு. விலையைக் கேட்டு மயக்கம் போட்டுட வேணாம். விலை ரூ.4,400.
என்ன தான் துப்பாக்கிப் பிடிச்சாலும் டைம் பார்த்து எதிரியை சுட வேண்டாமா? அதுக்காகத்தான் சிநேகா கையில் வாட்ச் கட்டியிருக்கிறார். சாதாரண வாட்ச் இல்லீங்க… லூசியன் பிக்கார்டு பிராண்டு போலிருக்கு. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பிடிபோட்டு வரும் இது க்ரீம், பியர்ல், க்ரீம் மதர் போன்ற பொன் வண்ணங்களில் கிடைக்கிறது. அங்கங்கே வைரங்கள் பதிக்கப்பட்ட வாட்ச்சுகளும் வருகிறது.இதன் விலை 6,500 ரூபாய் மட்டுமே.
நம்மை மிரட்ட சிநேகாவின் கண்களே போதும் என்றாலும் நம்மை விட மோசமான எதிரி யாரையோ கையாளவே சிநேகா துப்பாக்கி பிடித்திருக்கிறார்.துப்பாக்கிகள் பலவிதம்.தீபாவளிக்கு கேப் வெடிக்க செய்யும் துப்பாக்கி ரூ.10இல் இருந்து ரூ.100 வரை கிடைக்கிறது. கொஞ்சம் பெரிய சிறியவர்கள் விளையாட்டுக்காக பயன்படுத்தும் துப்பாக்கிகள் ரூ.300 விலையில் கிடைக்கின்றன.
அப்புறம் வேட்டையாட பயன்படுத்தும் துப்பாக்கிகளும், சினிமாவில் பயன்படுத்து டம்மி துப்பாக்கிகளும் மார்க்கெட்டில் கிடைக்கின்றன. சில நேரம் சினிமாக்காரர்கள் அசல் லுக் வேண்டும் என்பதற்காக, நிஜ துப்பாக்கியைக் கூட (குண்டு போடாமல்) பயன்படுத்துவார்கள். ஆனால் ஆபத்திற்கு உதவும், தன்னை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றிக்கொள்ள உதவும் நிஜ துப்பாக்கிகள் (சுடும்!) ரூ.10 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை கிடைக்கிறது.நிஜ துப்பாக்கி வாங்கனும்னா நம்ம மாநில அரசிடம் அனுமதி வாங்கனும். சிநேகா பிடித்திருக்கும் துப்பாக்கி நிஜ துப்பாக்கி தான் என்று வைத்துக் கொள்வோம். அதிகபட்ச விலையான ரூ.40,000 யை போட்டுக் கொள்வோம்.
http://www.huntersdirect.com/handguns.php
கடைசியாக கடைசியாக அக்கடா என சிநேகாவின் பாதங்களை பாதுகாக்கும் ஷூக்கு வருவோம். சிநேகாவின் ஷூ ஸ்கேட்டிங் பயிற்சி எடுப்பவர்கள் பயன்படுத்தும் ஷூ போலவே இருக்கிறது.இதை அணிந்தால், எவ்வளவு வேகமாக வேண்டுமானாலும் வழுக்கியபடியே செல்ல முடியும், ஆனால் விழாமல். ஏழு, எட்டு, பத்து அளவுகளில் கிடைக்கிறது. எதிராளி நினைத்துப் பார்க்காத வேகத்தில் சென்று மோதி வீழ்த்திவிடலாம்.(நடுவில் கல்லோ எண்ணெயோ சதி பண்ணா ஷூ பொறுப்பல்ல)விலை 3,000 ரூபாய்.
http://www.jamesandjames.com/htmlfiles/shoefiles/dc/dctrivisdkc.htm
சரி, இப்போ சிநேகாவோட ஒட்டுமொத்த விலை என்னன்னு பார்ப்போமா? ஐய்யயோ, ஸாரிங்க… சிநேகா போட்டிருக்கும் ஆடை, அணிகலன்களின் ஒட்டுமொத்த ரேட்டை பார்ப்போமா? 64,800 ரூபாய் வருதுங்க.
பவானி ஐ.பி.எஸ்.,ஸின் ஒரு கெட்டப்புக்கே இவ்வளவு செலவு என்றால் படம் ழுழுக்க சிநேகாவின் காஸ்ட்யூம் செலவு மட்டும் பல லட்சங்களைத் தொடும் போலிருக்கு.என்னப் பண்றது ரசிகர்கள் மனதை தொடணும்னா, லட்சம் என்ன கோடி கணக்குலகூட செலவு செய்துதானே ஆகவேண்டியிருக்கு.
-கிசே
No comments:
Post a Comment